
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்
பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்
தமிழ்க்கடல்Sunday, October 28, 2018

தமிழக பாரம்பரிய மரமான பனைமரம், வறட்சியை தாங்கி வளரக்கூடியது மட்டுமின்றி மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடியதுமாகும். வேர் முதல் நுனி வரை மண் ணுக்கும், மக்களுக்கும் தீங்கிழைக்காத இயற்கைப் பொருள்களை அளிக்கக்கூடிய கற்பகவிருட்சம் என பனை மரத்துக்கு பல சிறப்புகள் உள்ளன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம் தற்போது அழிவின் அபாயத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், பனை மர விதைகள் நடவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்கள் தலா 10 பேர் வீதம் பல குழுக்களாக பிரிக்கப் பட்டு அந்த பனை மர விதைகள் ஓரளவுக்கு வளரும் வரை அவற்றைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஐடி சமூகவியல், மொழியியல் பள்ளியின் பேராசிரியை எம்.தேன்மொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பனை விதைகள் நடவின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக இந்தப் பனை விதை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நடவு செய்து பாதுகாக்கப்படும் பனை மரங்கள் வளர்ந்தவுடன் அந்த மரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர் பொறிக்கப்படும். இதனால், மாணவர்களை பனை மர நடவை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். மாதம் ஒரு பள்ளி என்ற அடிப்படையில் இந்த பனை விதை திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த பனை விதை திருவிழாவில் விஐடி பேராசிரியர்கள் சுரேஷ்குமார், சந்தோஷ்குமார், பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் குப்புராஜ், பசுமைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்








