JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஆரோக்கியமான எந்த வகை உணவாக இருந்தாலும், அது நம் உணவில் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும்.
எனவே அந்த வகையில் பார்க்கும் போது, சீரகத்தையும் நமது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், அது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.
நமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சீரகம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனால் அதிக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
நம் உணவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால், சிறுகுடலில் காற்று அதிகமாகி, அவை வாயின் வழியே வெளியேறும். இதனால் அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனைகள் உண்டாகிறது.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில், நீண்ட காலமாக அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டிருந்தால், சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது. எனவே நமது உடம்பின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அதிகமாக பாதிப்படையச் செய்யும்.
கர்ப்பிணிகள் தங்களின் உணவில் மிதமான சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கர்ப்பிணிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கருசிதைவு அல்லது குறைபிரசவம் ஏற்படுகிறது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக அதிகமாக சீரகத்தை உட்கொண்டால், அவர்களுக்கு அதிக ரத்தப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை போல நமது உடலில், ரத்த அழுத்தம் குறைவதாலும், நமது உடல் ஆரோக்கியமாக இருக்காது. எனவே சீரகம் அடிக்கடி தனியாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.