Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Friday, November 16, 2018

பகுதி நேர பி.இ., படிப்புக்கு விண்ணப்பம்

அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை, எஸ்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், பி.இ., பகுதி நேர படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.



டிப்ளமா படித்து விட்டு, பணியில் இருப்பவர்கள் மட்டுமே, இந்த படிப்பில் சேர முடியும். நடப்பு கல்வி ஆண்டில், பகுதி நேர படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலையின், https://www.aukdc.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



No comments:

Post a Comment