Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 11, 2018

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்போன்! தமிழக முதலமைச்சர் அதிரடி பேட்டி!!






தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்போன் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நேற்று மாலை கோவை விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதில், வெற்றி சின்னம் ஆனா இரட்டை இலை சின்னம் துரோகிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக தினகரன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதளித்த தமிழக முதல்வர், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உழைப்பால் அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கும், அதிமுக கட்சிக்கும் துரோகம் செய்தார்கள். அவர்களுக்கு உண்டான தக்க தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.



காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. அதிமுகவை இரண்டாக உடைக்க சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான். அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன் தான் இது நாட்டுமக்களுக்கும் தெரியும், கழகத்தில் உள்ள தொண்டர்களுக்கும் தெரியும்'' என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்போன் என்ற திட்டம் அதிமுக வெற்றி பெற்று 3 வருடங்கள் ஆகியும் அமலுக்கு வரவில்லையே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர். ''இன்றைய தினம் அனைவரிடமும் செல்போன் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தலின் போது இந்த இலவச செல்போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கு இருபவர்களிடமும் சரி, ஊடக நண்பர்களிடமும் சரி அனைவரிடமும் செல்போன் உள்ளது.



செல்போன் இல்லாதவர்களே இல்லை. இருப்பினும் இந்த திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment