வடநாட்டில் வாடகைக்கு விடப்படும் காகம்

வட இந்தியாவில் பலதரப்பட்ட வினோத நிகழ்வுகளை நாம் படித்திருக்கிறோம். காகத்தை வாடகைக்கு விடும் ஒரு செய்தி முகநூலில் வைரலாகி கொண்டு வருகிறது. தினசரி காலையில் நாம் எழுந்தது தொடங்கி மாலை வரை நம் கண்களில் அதிகமாகத் காணப்படும் பறவை காகம். காகம் கரையும் சப்தத்தை யாரும் கேட்காமல் இருக்க முடியாது.






நம் நாட்டு பறவைகளில் காகம் தான் அதிக சடங்குகளுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் பறவையாகும். காலையில் எழுந்ததும் இரண்டு காகங்களை ஜோடியாகப் கண்டால் நல்லது என்பது ஊராரின் ஐதீகம். வீட்டின் வாசலில் அமர்ந்து காகம் கரைந்துகொண்டே இருந்தால் உறவினர் வர இருக்கின்றனர் என சில மக்கள் நம்புகிறார்கள். காகத்தை தங்களின் இறந்துபோன மூதாதையர்களாக நம்பும் வழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தினமும் மூதாதையர்களுக்குப் படைப்பதாக நினைத்து காகங்களுக்கு உணவைப் படைப்பவர்கள் இருக்கின்றனர்.






மரணமடைந்தவருக்கு சடங்கு நடத்தும்போது காக்கைக்கு உணவு வைப்பது , இறந்தவருக்குச் செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. தண்ணீர் நிலைகள் குறைந்துபோனதன் காரணமாக காகங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. நம்மால் இப்போதெல்லாம் அதிகளவில் காகங்களை பார்க்க முடிவதில்லை.






இத்தகைய நிலையில், அண்மையில் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று வைரலானது. அதில் `வட இந்தியாவில் ஒருவர் காகத்துடன் வந்து ஒரு பெரிய திட்டில் தனது காகத்துடன் உட்கார்ந்திருக்கிறார். தனது முன்னோருக்குப் படையல் வைக்க விரும்புவோர் அவரிடம் வரிசையாக வந்து தாங்கள் கொண்டு வந்த உணவை நீட்டுகின்றனர். அந்த உணவை காகத்தைக் கொண்டு உண்ண வைக்கிறார் அவர்.
Share:

Categories