Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 31, 2019

வரலாற்றில் இன்று 31.01.2019


ஜனவரி 31 கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்

1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1915 – முதலாம் உலகப் போர்; ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1937 – சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.
1946 – யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.



1953 – வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கினர்.
1968 – நவூறு (Nauru) ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1980 – குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 – கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்



1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1828)
1881 – ஏர்விங் லாங்முயர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1957)
1902 – ஆல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
1929 – ருடொல்ஃப் மொஸ்பாவர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர்.
1935 – கென்சாபுரோ ஓயீ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்

இறப்புகள்



1580 – கர்தினால் ஹென்றி, போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1512)
1933 – ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1867)
1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
1955 – ஜோன் மொட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
1973 – ராக்னர் ஆண்டன் ஃபிரீஷ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
1987 – எம். பக்தவத்சலம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1897)
2009 — நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)

சிறப்பு நாள்

நவூறு – விடுதலை நாள் (1968)