Search This Blog

Monday, March 4, 2019

பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளை அரசு, கல்லூரிகளாக மாற்ற முடிவு

0 comments
தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



இதில், முதல்கட்டமாக 14 கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார்,

பாரதியார், பாரதிதாசன், பெரியார், திருவள்ளுவர் ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த 14 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.