Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 19, 2019

ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி


இந்த ஆண்டில் எந்தெந்த வகுப்புகளுக்கு புதிய புத்தகம் கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்பு எடுக்க கூடிய ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.