JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 31, 2019

தர்மபுரியில் வரும் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, மே 29: தர்மபுரியில் நாளை மறுநாள் (31ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.அதன்படி, நாளை மறுநாள் (31ம் தேதி) நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கு தேவையான விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மேலாளர், கணினி இயக்குநர்கள், தட்டச்சர், கணக்காளர், காசாளர், மெக்கானிக், விற்பனை பிரதிநிதிகள் போன்ற பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.



இது தவிர இதர கல்வித் தகுதிகள் உடையோர், தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். இந்த முகாம், இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே, இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள், தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.