JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 31, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்றங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியாக உள்ள (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000



பணி: முதுநிலை கட்டளைதாரர்
காலியிடங்கள்: 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பட்டயப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி இளநிலை கட்டளைதாரர்
காலியிடங்கள்: 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300



பணி: பதிவுரு எழுத்தர்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 49
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழுநேரப்பணி, சுகாதார பணியாளர்
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.



வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி படைத்தவர்களுக்கு வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:https://districts.ecourts.gov.in/tiruppur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு கையொப்பத்துடன் அனைத்து கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரிய சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் - 641 602.



மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20recruitment%20of%20various%20posts%20in%20Tiruppur%20District%20By%20PDJ%20Court%20-%20Tamil%20Version_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2019