ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 30

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 + இதர சலுகைககள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019eng.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel