தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: ஐசிஎப் அசத்தல் உத்தரவு!


தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோருக்கு மட்டும் ஐசிஎப் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில் பழகுநர் பியற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. தழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன.

மேலும், தமிழக வேலை தமிழருக்கு என்கிற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கி ஆகி வருகிறது.




இந்நிலையில், சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தொழில் பழகுநர் பயிற்சி (அப்பரண்டீஸ்) சேர்க்கைக்கு தொடர்பான அறிவிப்பில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐசிஎப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக உள்ளது.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel