தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அந்தோணி முத்து தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வரம்பில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்விக் கட்டணக் குழு ஒவ்வொரு வகுப்புக்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது.
இந்த கல்விக் கட்டண விவரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும், சம்பந்தப்பட்டப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்படுவதில்லை. இதனால் கல்விக் கட்டண விவரம் தெரியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். இதை பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண விவரங்களை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வகுப்பு வாரியாக இணையதளத்திலும், பள்ளி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடவேண்டும்.
மேலும் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்தனர்.