
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
மகர ஈற்றுப் புணர்ச்சி :
இரண்டு சொற்கள் இணையும்போது, நிலைமொழியில் மகர ஈற்றுச் சொல் வந்து, வருமொழியோடு புணர்வது மகரஈற்றுப் புணர்ச்சி எனப்படும்.
மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும்பொழுது, இறுதி
மகரம் (ம்) கெட்டு, உயிரீறுபோல நின்று, உயிர் முதல் மொழியோடு
உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
(எ.கா.) :
மரம் + அடி= மர + அடி, மர + வ் + அடி = மரவடி.
மகர ஈற்றுச் சொல்லோடு வருமொழி முதலில் வல்லினம் எழுத்துடைய சொல் இணையும்போது, நிலைமொழி ஈற்று மகர கெட்டு, வல்லின ஒற்று மிக்குப் புணரும்.
(எ.கா.) :
வட்டம் + கல் = வட்டக்கல் எனப் புணரும்.
மகர ஈற்றுச் சொல்லோடு வருமொழி முதலில் வல்லினம் எழுத்துடைய சொல் இணையும்போது, நிலைமொழி ஈற்று மகர வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்தும் புணரும்.
(எ.கா.) :
நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான்.
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாய்த் திரிபவும் ஆகும். – நன்னூல் 219.


