JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 31, 2019

மாவட்ட கல்வி அலுவலராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரிக்கை

மதுரை கல்வி மாவட்ட அலுவலர் பணியிடத்துக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில், மதுரைக் கல்வி மாவட்ட அலுவலர் வெள்ளிக்கிழமையுடன் (மே 31) பணி ஓய்வு பெறவுள்ளார்.

இதையடுத்து ஜூன் 1-ஆம் தேதி முதல் மதுரை கல்வி மாவட்ட அலுவலர் பணியிடத்துக்கு புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமும் ஒரே சமநிலை கொண்ட பதவி என்பதால், புதிய கல்வி அலுவலர் நியமனத்தின்போது, இதுவரை பின்பற்றப்பட்ட சுழற்சிமுறை மற்றும் இயற்கை நியதிகளின்படி மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மதுரை கல்வி மாவட்ட அலுவலராக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மனச்சோர்வின்றி பணியாற்ற உதவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.