Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 5, 2019

பள்ளி கல்வி, டிவி இருட்டடிப்பு அரசு கேபிளில் தனியாருக்கு இடம்

கல்விக்காக, தமிழில் முதல் தொலைக்காட்சி சேவையை, பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது .&'கல்வி டிவி&' என்ற சேனலை, முதல்வர், இ.பி.எஸ்., ஆக., 26ல் துவக்கி வைத்தார். இதற்கு, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், படப்பிடிப்பு தளமும், நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, அரசு கேபிள் நிறுவனத்தால்,இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு கல்வி சேனல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்ட, அதே இணைப்பில், தனியார் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, கேபிள், &'டிவி&' நிறுவன அதிகாரிகள் இடம் அளித்துள்ளனர்.இரு தொலைக்காட்சிகளின், அடையாள சின்னமான, &'லோகோ&' ஒன்றாக இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக, அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதனால், பெரும்பாலான நேரங்களில், அரசு கல்வி சேனலுக்காக ஒதுக்கப்பட்ட, கேபிள் இணைப்பில், தனியார் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பாகின்றன.

அரசு கேபிள் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவர் தான், இந்த தனியார் கல்வி சேனலை நடத்துவதாகவும், அதன் காரணமாகவே, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இணைப்பு எண்ணில், இந்நிறுவன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.அரசு கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளதால், பள்ளி கல்வி துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, அமைச்சரிடம் புகார் தெரிவித்து, அரசு கேபிள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment