Wednesday, September 25, 2019

பட்டத்தாரிகளுக்கு எல்ஐசியில் வேலை




இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் பிரிவில் 8,500 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ,14,435 முதல் ரூ.40,080 வரை வழங்கப்படும்.



வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதை தொடர்ந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் http://lic.india.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி:17.09.2019

விண்ணப்பிக்க கடைசி தேதி:01.10.2019