Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 14, 2019

பழந்தமிழ் நூல்கள் ஒரே இடத்தில் விற்பனை

தமிழகத்தின் பழமையான வரலாறு, பழந்தமிழர்களின் கலாச்சாரம், கலை, பண்பாடு குறித்த தகவல்களை, வெவ்வேறு நிறுவனங்கள், நுாலாக்கி விற்பனை செய்கின்றன.மரபுச் சிற்ப சாஸ்திரங்கள் மற்றும் நுணுக்கங்கள், மரபுக் கட்டடக்கலை நுணுக்கங்கள், பாரம்பரிய ஓவிய நுணுக்கங்கள், பழமையான இசைக் கருவிகள், நாட்டிய வகைகள், அரங்க அமைப்புகள், கலைகள் உள்ளிட்டவற்றை, கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

பழந்தமிழ் இலக்கணம், பழந்தமிழர் வாழ்வியல் முறைகள் குறித்து, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், பல்வேறு நிறுவனங்கள் அச்சிடுகின்றன.பழந்தமிழர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட, சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நுால்களை, தமிழக தொல்லியல் துறையும் அச்சிடுகிறது. இவை அனைத்தும், பல்வேறு இடங்களில் விற்கப்படுகின்றன.பழந்தமிழரின் வாழ்வியல் குறித்த, ஒருங்கிணைந்த ஆய்வில் ஈடுபடுவோருக்கு, இந்த நுால்களை பெறுவதில், சிக்கல் ஏற்படுகிறது.இது குறித்து, ஆய்வாளர்கள் கூறியதாவது:தமிழ் வளர்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை என, பழந்தமிழர் வாழ்வியலோடு தொடர்புடைய துறைகள் அனைத்தும், அமைச்சர், பாண்டியராஜனின் தலைமையின் கீழ் தான் செயல்படுகின்றன.

எனவே, அனைத்து துறைகளிலும் பதிப்பிக்கப்படும் நுால்களை ஒருங்கிணைத்து விற்க, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சி வளாகத்தில், அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களும் உள்ளதால், அங்கு, விற்பனை கூடத்தை அமைத்து, 40 சதவீதம் வரை, தள்ளுபடி விலையில் விற்றால், ஆய்வாளர்களுக்கு பயன்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment