Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 30, 2019

பட்டதாரி இளைஞர்களுக்கு பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை.!



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள ரேடியோகிராபர், லிப்ட் ஆப்ரேட்டர், நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், நோயாளி பராமரிப்பு மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ பயின்றவர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 35

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
ரேடியோகிராபர் - 10
லிப்ட் ஆப்ரேட்டர் - 05
நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் - 10
நோயாளி பராமரிப்பு மேலாளர் - 10

கல்வித் தகுதி:
ரேடியோகிராபர் - பி.எஸ்சி
லிப்ட் ஆப்ரேட்டர் - ITI,Diploma
நோயாளி பராமரிப்பு மேலாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :
ரேடியோகிராபர் - ரூ. 25,000
லிப்ட் ஆப்ரேட்டர் - ரூ. 16,962
நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் - ரூ. 18,462
நோயாளி பராமரிப்பு மேலாளர் - ரூ. 30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : BECILs Corporate Office: C-56, A/17, Sector-62, Noida -201307.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.