Breaking

Wednesday, September 25, 2019

சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற புதிய விருதை அறிமுகம் செய்தது மத்திய அரசு



டெல்லி: 'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது' என்ற புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் என தெரிவித்துள்ளது. நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.