Thursday, September 26, 2019

DRDO Recruitment 2019: 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், நிர்வாக உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)

மொத்த காலிப் பணியிடங்கள் : 224



பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

பணி : சுருக்கெழுத்தாளர் தரம் -2 (ஆங்கில தட்டச்சு) - 13

கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், எழுதிய வார்த்தைகளை 50 நிமிடத்தில் ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : நிர்வாக உதவியாளர் 'ஏ' (ஆங்கில தட்டச்சு) - 54

கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : நிர்வாக உதவியாளர் 'ஏ' (இந்தி தட்டச்சு) - 04



கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் கணினியில் இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Store Assistant 'A' (ஆங்கில தட்டச்சு) - 28

கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 35 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Store Assistant 'A' (இந்தி தட்டச்சு) - 04

கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் வீதம் கணினியில் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : பாதுகாப்பு உதவியாளர் 'ஏ' - 40

கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : எழுத்தர் (கேன்டீன் மேலாளர் தரம் -3) - 03



கல்வித் மற்றும் கூடுதல் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Asstt Halwai-cum Cook - 29

கல்வி மற்றும் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் கலையில் அரசுத் துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Fire Engine Driver 'A' - 06

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இலகுரக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சாலைப்போக்குவரத்து விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். கடினமான வேலைகள் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Fireman - 20

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.



ஊதியம் : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழில் திறன் மற்றும் உடல்தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மையம் : சென்னை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம் : ரூபாய் 100. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை : www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.10.2019



இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ceptam09.com/Upload/Document/eng_10301_20_1920b.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top