JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, October 2, 2019

நிலக்கரி நிறுவனத்தில் 750 பேருக்கு பயிற்சிப் பணிகள்!!


மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.



பிட்டர் -250, வெல்டர் -40, எலக்ட்ரீசியன் -360, மெக்கானிக் -45, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்ட் -15, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக்- 5, மெஷினிஸ்ட் -20, டர்னர் -15 என மொத்தம் 750 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ; 15-10-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். OBC , SC , ST பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு.



பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வரும் 15-ந் தேதி கடைசிநாள், முழு விவரங்களை பார்க்க http://www.centralcoalfields.in