JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, December 21, 2019

எழுத்தறிவு திட்டத்தில் கல்லாதோருக்காக கியூ.ஆர்.,கோடுடன் புத்தகம்


ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:கல்லாதோர் எளிதில் கற்கும் வகையில் இந்திய அளவில் முதன்முறையாக வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகத்தில் கியூ.ஆர்., கோடுடன் சிறப்பு எழுத்தறிவு நுால் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் படங்களை வைத்து எண்களை அறிதல், அடிப்படை கணிதம், சாலை பாதுகாப்பு, முதலுவி, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட கல்லாதோர் எளிதில் கற்க்கும் வகையில் அடிப்படை விஷயங்களை கொண்டு புத்தகம் உருவாகியுள்ளது.



இந்த புத்தகத்தில் உள்ள பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் அதில் உள்ள கியூ.ஆர்.கோடை, அலைபேசியால் ஸ்கேன் செய்தால் அதற்கான வீடியோக்கள் ஒளிப்பரப்பாகும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லாதோருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகங்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஜன., மாதம் இந்த புத்தகங்கள் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.