Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 23, 2020

10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு



10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு
10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் விற்பனை செய்ய உள்ளது.
10, 12-ம் வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பு, ஜனவரி 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தற்போது கட்டுமானப் பணி நடந்து வருவதால், அங்கே இந்த ஆண்டு மாதிரி வினாத்தாள் விற்பனை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை எம்எம்டிஏ அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 27 முதல் மாதிரி வினாத்தாள் விற்பனையாகிறது. அதேபோல சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மாதிரி வினாத்தாள்கள் விற்பனையாக உள்ளன.




மாதிரி வினாத்தாளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுக்கு ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக ரூ.80-க்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்பட உள்ளது.