Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 23, 2020

SBIல் 8,000 பணியிடங்கள்:வரும் ஞாயிறு கடைசி நாள்


இந்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகவும் பிரபலமான அரசு வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) தற்போது காலியாக உள்ள 8,000 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை(Junior Associates - Customer Support & Sales) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 26ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.பி.ஐ வங்கியில் தற்போது காலியாக உள்ள கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான 8,000 காலியிடங்களில் பொது பிரிவு 3387, எஸ்சி 1209, எஸ்டி 713, ஓபிசி 1784 என்று மொத்தம் 7,870 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் சண்டிகர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கலி் சிறப்பு ஆள் சேர்ப்பு பிரிவில் மொத்தம் 130 இடங்கள் நிரப்பப்படுகிறது




தமிழகத்தில் பொது பிரிவு 171, ஈடபிள்யூஎஸ் பிரவு 39, எஸ்சி பிரவு 74, எஸ்டி 3, ஓபிசி 106 என மொத்தம் 393 காலியிடங்கள் இருக்கின்றன.



காலிப் பணியிடங்கள்: 8,000

பணியிடம்: Junior Associate (Customer Support and Sales) Vacancies

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 26, 2020

அழைப்புக் கடிதம்-பிப்ரவரி.2020

முதல்நிலைத் தேர்வு- பிப்ரவரி அல்லது மார்ச் 2020

முதன்மைத் தேர்வு: ஏப்ரல் 4, 2020

முதல்நிலைத் தேர்வு முடிவு: மார்ச்,2020

முதன்மைத் தேர்வு முடிவு: ஏப்ரல், 2020




கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும். கடைசி வருடம் கல்லூரியில் படிப்பவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

முதல்நிலைத் தேர்வு மூன்று பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வு ஒரு மணிநேரம் நடைபெறும். அடுத்து நடக்கும் முதன்மைத் தேர்வு 190 கேள்விகள் அடங்கிய 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இத்தேர்வு 2 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும். மேலும், இத்தேர்வில் தவறான மதிப்பெண்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்

வயது: விண்ணப்பதாரர்கள் 1-1-2020 நாளில் 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.26,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்ப கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ.750 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தில் SC / ST / PWD / XS பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்ப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பக்க www.sbi.co.in/careers/ongoing-recruitment.html என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://sbi.co.in/web/careers/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் அறியலாம்.