Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 7, 2020

தனித் தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழகத்தில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிப்.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு கடந்த ஜன.27-ஆம் தேதி முதல் ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.




நிகழாண்டு ஜன.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தேர்வா்கள் தத்கல் திட்டத்தின் கீழ் பிப்.10-ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மட்டும் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் (‌n‌o‌d​a‌l c‌e‌n‌t‌r‌e) ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675- தொகையை தனித்தேர்வா்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.




ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை தேர்வா்கள் பிப்.12-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.