Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 9, 2020

தண்ணீரை குடிக்க கூடாது ? ஏன்? எப்பொழுது?


தண்ணீரை போதுமான அளவு குடிக்காம‌ல் இருப்பதால் மட்டுமல்ல , தேவையற்ற நேரங்களில் குடித்தாலும் உடல் நலக் குறைவை சந்திக்க நேரிடும்..... எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க கூடாது என தற்போது நாம் பார்க்கலாம்.
தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை எற்படுத்து வாய்ப்புள்ளது. மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம்.





சிலர் எழுந்தவுடன் லிட்டர் லிட்டராக தண்ணீர் குடித்து வருகின்றனர். அவ்வாறு தண்ணீரை பருக கூடாது. ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை மட்டுமே , காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்குள்ளாக குடிக்க வேண்டும். அதிலும் , குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.





சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்... இப்படி எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை உருவாக்கிடும். தண்ணீர் மட்டுமல்ல மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

பிளாஸ்டிக் பாட்டிலில் நாம் நீர் அருந்தினால், அதன் மாலிக்யூல் நீருடன் சிறிது சிறிதாகக் கலந்து நமக்கு புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.





நம்மில் பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.




நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது வயிற்றில் தெறித்து விழும் , மேலும் தண்ணீர் வயிற்றில் வேகமாக செல்வதால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை பாதிக்கும். நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் வடிகட்டும் தன்மை பாதிக்கப்படும்.
இதனால் சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடலின் நீர் சமநிலை பாதிப்படைகிறது. இதன் காரணமாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படலாம். மேலும் செரிமான கோளாறுகள் ஏற்படக்கூடும்.

தண்ணீரை வாய் வைத்தே குடிப்பது நல்லது. மெல்ல மெல்ல தண்ணீர் வயிற்றுக்குள் செல்லுமாறு குடிப்பது மிக அவசியம். தண்ணீரை அவசர அவசரமாக குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.





பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்திக் கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.




கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாய் வெந்து போய்விடுகிறது. ஏனென்றால் கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடுகிறது. இதனால் கரும்பு சாப்பிட்டு முடிந்து 15 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீரை சரியான நேரத்தில் , சரியான அளவு குடித்து வருவதினால் பல உடல் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.