THAMIZHKADAL TODAY NEWS

துளசியின் நன்மைகள் பற்றி தெரியுமா?


மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று.



எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel