Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 10, 2020

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை !!



கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர். இதனால் அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ.களை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாஅனைத்துவித கடன்களுக்கும் 3 மாத இ.எம்.ஐ தள்ளி வைப்பு குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களிடம் இ.எம்.ஐ. தள்ளிவைப்பு தொடர்பாக புதிய ஓ.டி.பி மோசடி நடப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், ” சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வழிகளில் மோசடியை தொடங்கி விட்டனர். இது மாதிரியான மோசடியாளர்கள் கடன் இ.எம்.ஐ தள்ளிவைப்பு பற்றி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) பெறுகிறார்கள். ஒரு முறை ஓ.டி.பி.யை பகிர்ந்தால் அவர்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதனால் உங்களது ஒ.டி.பி.யை யாருடனும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment