Subscribe Us

Wednesday, May 27, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கலெக்டர் ஆலோசனை

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் துவங்கும் என, தமிழக அரசு அறிவித்தது. இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் சீதாலட்சுமி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் கூறியதாவது: தேர்வு மையங்களுக்கு, மாணவர்களை அழைத்து வருவதற்கான, பஸ் வசதிகளை ஏற்படுத்த, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மாணவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், வகுப்பறைகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர், தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed