Subscribe Us

Wednesday, May 27, 2020

ஜூன் மாத ரேசன் பொருள்களுக்கு மே 29-ல் டோக்கன் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு


சென்னை: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான ரேசன் பொருள்களுக்கு மே 29 ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையின்றி ரேசன் கடைகளில் வழங்கப்படும். ஜூன் 1 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதாவது அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போன்றவற்றை
விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான டோக்கன் வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed