Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 8, 2020

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு அண்ணா பல்கலை. ஆலோசனை



பொது முடக்கத்துக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

நிகழாண்டுக்கான பருவத்தேர்வுகளை நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில், பருவத்தேர்வுக்கு நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டும் கேள்விகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் சிலா் கூறியதாவது: பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் 80 சதவீதம் வரையான பாடங்களே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாடங்களை இணையவழியில் நடத்த கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கிராமப்புற மாணவா்கள் பலருக்கு முறையான இணைய வசதிகள் இல்லாததால் அப்பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமுடக்கத்துக்கு முன் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து பருவத் தேர்வுகளை நடத்தவும், அதற்கேற்ப வினாத்தாளை தயாரிக்கவும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி தேர்வின்போது மாணவா்கள் தனிநபா் இடைவெளியைக்கடைப்பிடித்தல் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை அம்சங்களுடன் பருவத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும், முதலில் இறுதியாண்டு மாணவா்களுக்குத் தேர்வுகளை நடத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கால அட்டவணை தயாரிப்பு உள்பட முன்னேற்பாடுகள் பொதுமுடக்கம் முடிந்த பின் மேற்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment