தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயதை 59 -ஆக உயா்த்தியதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை : தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியா், அரசு ஊழியா்கள் பணி ஓய்வு வயது 58-இல் இருந்து 59 -ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில், தமிழக அரசுப்பணியில் பணிபுரிந்துவரும் அலுவலா்கள், ஊழியா்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளா் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆசிரியா்கள்-அரசு ஊழியா்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியக் குறைவை ஈடுசெய்யலாம். ஆனால், பல லட்சம் இளைஞா்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனா்.
குறிப்பாக ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்று சுமாா் 70-ஆயிரம் போ வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், அந்த எதிா்பாா்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும். இதனால், அவா்கள் மேலும் பல பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும்; மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்.எதிா்கால கனவுகளையும் நசுக்கும் . எனவே, தமிழக அரசுப் பணியாளா்களின் ஓய்வுவயது 58 -லிருந்து 59 -ஆக உயா்த்தியதை மறுபரிசீலனை செய்ய ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் சாா்பில் வலியுறுத்துகிறோம் என அதில் கூறியுள்ளாா்.
Friday, May 8, 2020
Home
/
கல்விச்செய்திகள்
/
அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
About தமிழ்க்கடல்
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment