Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 28, 2020

அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு :இனி, வெப்பம் படிப்படியாக குறையும்


திருப்பூர்:ஊரடங்கு நேரத்தில், மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்த, கத்திரி வெயில் இன்று நிறைவு பெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலில், கத்திரி வெயில், அனைவரையும் வாட்டியெடுக்கிறது. குடை பிடித்தபடி சென்றாலும், குடையே தீப்பற்றி எரிவது போல் சூடு பறந்து கொண்டிருக்கிறது. கோடை மழை கருணை காட்டும் போது, சில நாட்கள் இயல்பாக கழிந்தது.மற்ற நாட்களில், கடும் அவதியை சந்திக்க வேண்டிய கட்டாயநிலை உள்ளது. சிவாலயங்களில், தாராபாத்திரம் பொருத்தி, ஆவுடையார் மீது, சொட்டு சொட்டாக, தீர்த்தம் விழும் வகையில், குளிர்விக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில், கோடை வெயிலும் மக்களை வீட்டுக்குள் வைத்துவிட்டது.இப்படியாக, மக்களை வாட்டியெடுத்த கத்திரி வெயில், 2ம் தேதி துவங்கியது; இன்றுடன் விடைபெறுகிறது. கோடை மழை பெய்ததாலும், கத்திரி நிறைவு பெற்றதாலும், வெப்பம் படிப்படியாக குறையும். கேரளாவில், தென்மேற்கு பருவமழை துவங்கியதும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பருவநிலை மாறும் என, பேரிடர் மேலாண்மை பிரிவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment