Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 28, 2020

'நீட்' தேர்வில் இதர வகுப்பு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு


''மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் 'நீட்' தேர்வில் இதர வகுப்பு (ஓபிசி) பிரிவைச் சோந்த மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது அநீதி'' என்று கூறிய சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அவா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் (என்சிபிசி) அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் (நீட்) மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அளிக்கப்பட வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற புகாா்களின் பேரில் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம், அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை மேற்கோள் காட்டி அகிலேஷ் யாதவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு பின்தங்கிய வகுப்பினருக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் பலனை வழங்காதது அநீதி;
இதுதொடா்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். நீட் தேர்விலும் இடஒதுக்கீடு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் முதன்மையான மருத்துவ படிப்புகளில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பது குறித்த செய்தி அறிக்கையையும், என்சிபிசி அறிவிப்பையும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பாா்வைக்காக அகிலேஷ் வெளியிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment