Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

உடல்நலம் பாதிக்கப்பட்ட குட்டியை கவ்விக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த தாய்ப் பூனை!



உடல்நிலை சரியில்லாத தன்னுடைய குட்டியை தாய்ப் பூனை ஒன்று மருத்துவமனைக்குத் கவ்விக் கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மருத்துவமனைக்கு சென்ற பூனையை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்தனர். பூனைக்குட்டிக்கு உதவ மருத்துவர்கள் முன்வந்த போது, தாய்ப் பூனை தனது குட்டியை கீழே விடவில்லை. மருத்துவர்கள் தாய் பூனைக்கு பால் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் இரண்டு பூனைகளையும் ஒரு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குட்டி பூனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பூனையை பாதுகாப்பாக அரவணைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.


No comments:

Post a Comment