தனித் தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதேர்றும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், மறு தேர்வுக்கால அட்டவணை எதுவும் அறிவிக்கப்படாததால் தனித்தேர்வா்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் 'தற்போதைய நிலவரத்தின்படி 10, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தி முடித்தபின் ஜூன் மாத இறுதியில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளா்த்தப்பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும்' என்றனா்.
JOIN OUR THAMIZHKADAL SOCIAL MEDIA
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, May 2, 2020
தனித் தேர்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுத்துறை விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment