Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 18, 2020

ஜுலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்


ஈரோடு மாவட்டம் நம்பியூரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குளம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 12-ம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

அனைத் தொடர்ந்து பேசியவர், 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜுலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று அவர் கூறினார்.

மேலும் பள்ளிகள் திறப்பது மற்றும் பருவத் தேர்வு ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று கூறிய செங்கோட்டையன், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து தனியார் பள்ளிகள் மீது இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை எனவும், வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் படிக்க... வடகொரியா - தென்கொரியா மோதல்: தயார் நிலையில் ராணுவம்..

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment