Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 12, 2020

தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கா? - முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது என சமூகவலைதளங்களில் வெளியான செய்திக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றூபாதிப்பு மிகவும் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை 38,717 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில்தான் கரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தின் மொத்த பாதிப்புகளிலேயே சென்னையில் தான் 70% எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்நோக்கில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானவண்ணம் இருந்தது. அது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறந்துவிட்டபோது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, "கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தபிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.


முதல்வர் பழனிசாமி விளக்கம்

மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசத்தை அணியவேண்டும். குறிப்பாக வெளியே செல்பவர்கள் சோப்பு போட்டு கைகளை கழுவியபின்னர்தான் வீட்டிற்குள்ளேயே போகவேண்டும். மீண்டும் கடுமையான ஊரடங்கு என சமூகவலைதளங்களில் வருவது தவறான செய்தி. இதுபோன்று தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக விலகலே தற்போதைக்கான மருந்து. கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியான செய்தி தவறானது என முதல்வர் கூறியதாக அதிமுகவின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment