Join THAMIZHKADAL WhatsApp Groups

அவகேடாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் வறண்ட முடியை சரி செய்யவும் உதவும். எனவே இத்துடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியை நனைத்து விட்டு கலவையை எடுத்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் இருந்து முடியின் நுனிப்பகுதி வரை தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
பின்னர் முடியை தூக்கிக்கட்டி பிளாஸ்டிக் கவர் அல்லது ஷவர் கேப் கொண்டு மூடி வைக்கவும். இது வெப்பத்தை உள்ளே விடாமல் வைத்திருக்க உதவும். இந்த கலவையைத் தலையில் அரைமணி நேரம் வைத்து பின்னர் நன்றாக காய்ந்த பின்னர் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முயற்சியை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
No comments:
Post a Comment