Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 11, 2020

குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசத்தை அறிவித்த தமிழக அரசு.!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,927 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,008 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 24,545 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க தமிழக அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.13.5 கோடி முகக்கவசங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Popular Feed

Recent Story

Featured News