Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 25, 2020

போராட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுங்கள்:ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

போராட்டம் நடத்தியஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தை நடத்தாமல் கைது செய்து சிறையில் அடைத்து சஸ்பெண்ட் செய்தது. பின் மாணவர் நலன் கருதி மீண்டும் பணியமர்த்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகளும், 17 'பி' துறை ரீதியிலான நடவடிக்கைகளும் நிலுவையில் உள்ளன. உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர், அரசு ஊழியர்கள் மன உளைச்சலில் பணியாற்று கின்றனர். சிறை சென்றவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பரிசீலனை செய்து ஆசிரியர், அரசு ஊழியர் நலன் கருதி அனைத்து துறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment