Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 31, 2020

10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.

புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 வருடங்கள் என்று இந்த கல்வி முறை கொண்டு வரப்படுகிறது.

அதன்படி இந்த வகுப்பு பிரிவுகள் 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயது வரை இந்த பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும். 1ம் வகுப்புக்கு முன் படிப்புகளை தொடங்கும் வகையில் இந்த கல்வி முறையை மாற்ற உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மீது மட்டும் கவனம் செலுத்தும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு, 2ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மீது கவனம் செலுத்த வகை செய்யும் வகையில் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை செய்து இந்த கல்வி முறையை கொண்டு வர உள்ளது. மொத்தம் நான்கு நிலைகள் இந்த படிப்பில் உள்ளது.
அதன்படி
அடிப்படை நிலை (Foundational Stage): ஐந்து வருடம் அங்கன்வாடி போன்ற ப்ரீ ஸ்கூல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் எடுக்கப்படும். மொழி அறிமுகம், பல்வேறு பண்புகள், நீதி நெறி கல்விகள், அடிப்படை திறமைகளை கண்டறியும் கல்விகள் கொண்டு வரப்படும். விளையாட்டு ரீதியாகவும், குழந்தைகளுக்கு மொழிகளை கற்பிக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
தயாரிப்பு நிலை ( Preparatory Stage ): 3ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை இந்த பாடத்திட்டம் அமலில் இருக்கும். அறிவியல், கணிதம், கலை ஆகிய அடிப்படை படிப்புகள் இதில் அமலில் இருக்கும்.
மத்திய நிலை (Middle Stage): 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்த பாடம் அமலில் இருக்கும். இதில் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை முறையான அனுமதிக்கு பின் அமலுக்கு கொண்டு வருவார்கள்.
இரண்டாம் நிலை (Secondary Stage): இந்த நிலையை இரண்டு கட்டமாக அறிமுகப்டுத்தப்படுகிறார்கள். அதன்படி 9-10 ம் வகுப்பு வரை முதல் கட்டம், 11-12ம் வகுப்பு வரை இரண்டாம் கட்டம் அமலில் இருக்கும். மிக ஆழமான கல்விமுறை, வாழ்க்கை கல்வி முறை , தொழிற்கல்வி, பாடங்கள் குறித்த கல்விமுறை, திறமைகளை வளர்க்கும் கல்வி முறை இதில் அமல்படுத்தப்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மட்டும் தேர்வுகள் இருந்ததை எளிதாக்கி நான்காக பிரிக்க உள்ளனர். 5+3+3+4 பிரிவுகளில் தேர்வுகள் பிரித்து பிரித்து நடத்தப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்ந்து நடக்கும். ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்து மற்ற 5+3+3+4 பிரிவுகளிலும் தேர்வுகள் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment