Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 1, 2020

12 வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் பழனிசாமியின் ஆலோசனையின் படி வெளியாகும்.!!! அமைச்சர் செங்கோட்டையன்.!!!


12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் பழனிசாமியின் ஆலோசனையின் படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறினார்.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதே நிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் பிரச்சனைகள் உள்ளதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வரின் ஆலோசனைப் படி 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடபடும் எனவும் தெரிவித்தார்.

பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழக்கப்பட்டு வருவதாகவும், புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா பிரச்சனைகள் தீர்ந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment