Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 1, 2020

வயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்


சென்னை: உலகில் முதல் முறையாக ஆன்லைன் பி.எஸ்.சி. டேட்டா சயின்ஸ் அண்ட் ப்ரோகிராமிங் (BSc Programming and Data Science) பட்டப் படிப்பு சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்படும்.

உலகில் வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கித் தரக்குடியதாக Programming and Data Science துறை வளர்ந்து நிற்கிறது. இத்துறையில் அடுத்த 6 ஆண்டுகளில் அதாவது 2026-ல் 1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடிப்படையாக உலகிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலம் பி.எஸ்.சி. டேட்டா சயின்ஸ் அண்ட் ப்ரோகிராமிங் பட்டப் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று தொடங்கி வைத்தார்.

இப்படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. தற்போது 12-ம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.. வேறு பட்டப் படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள்... பணிகளில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இப்படிப்பில் சேரலாம். வரும் 2021 ஜனவரி முதல் இப்படிப்புகள் தொடங்குகின்றன.

இப்படிப்பில் சேருவதற்கு தகுதி தேர்வு நடத்தப்படும். இதற்கான கட்டணம் ரூ3,000. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான 4 வார பாடத் திட்டங்களும் உடனடியாக வழங்கப்பட்டுவிடும். இந்த 4 வார முடிவில் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு பெறும் மாணவர்கள் பவுண்டேசன் ப்ரோகிராம் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.

இதனைத் தொடர்ந்து டிப்ளமோ, டிகிரி ஆகிய நிலைகளில் பாடம் கற்பிக்கப்படும். இதில் படிக்கும் மாணவர் தாம் விரும்பும் நிலையை முடித்த உடன் விலகிக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு

No comments:

Post a Comment