Join THAMIZHKADAL WhatsApp Groups

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடல் தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
கடிதத்தில், நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31-ம் தேதி வரை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்துதான் பணியாற்ற வேண்டும். எனவே, நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜூலை 31 வரை கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment