Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 11, 2020

பொறியியல், மருத்துவ கல்லூரிகள் திறப்பு எப்போது?


புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று ஊரடங்கு நடவடிக்கை காரணமாக பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு நவம்பரில் வகுப்புக்கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ெகாரோனா பாதிப்பால், எம்பிபிஎஸ் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதும் தொடர்ந்து தாமதமாகி வருகின்றது. புதிய அட்டவணையின்படி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு அமைப்பானது ஜேஇஇ மெயின் தேர்வுகளை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அதே மாதம் 10 அல்லது 11ம் தேதி வெளியிடப்படும். இந்த நடைமுறைக்கு பின்னர் பிடெக் பிரிவில் சேர்வதற்கான கவுன்சிலிங் மற்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு நடவடிக்கை தொடங்கும்.

இது குறித்து தேசிய தேர்வு அமைப்பு அதிகாரி கூறுகையில், “செப்டம்பர் மாத இடையில் ஆன்லைனில் இட ஒதுக்கீடு செய்யும் செயல்முறையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலமாக நவம்பரில் நிரப்பப்படும். அதேபோல் செப்டம்பர் 13ம் தேதி மருத்துவ கல்லூரிகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடத்துவதற்கு மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு 15 முதல் 20 நாட்கள் ஆகும். எனவே ஆன்லைன் மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணியானது அக்டோபர் மாத பிற்பகுதியில் தொடங்கும்’’ என்றார். வேலை நாட்கள் குறைவு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் வேலைநாட்களாக செயல்படுவது, கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது

No comments:

Post a Comment