பிளஸ் 2 மறுதேர்வு ஹால்டிக்கெட்டை, 13ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வினியோகிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:கடந்த, மார்ச் 24ல் தேர்வு எழுதாத, பிளஸ் 2 மாணவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவர்களுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளியிலே பதிவிறக்கம் செய்து, 13 முதல் வினியோக்க வேண்டும். இதற்காக, கணினி இயக்கத்தெரிந்த ஆசிரியரை பள்ளிக்கு வரைவழைப்பது அவசியம்.மேலும், 17ம் தேதி வரை தினமும் மாலை, 4:00 மணிக்குள் ஹால்டிக்கெட் வழங்கப்பட்ட
விவரத்தினை பாடவாரியாக, திருப்பூர் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்தில் பெறலாம். தனித்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள், உரிய தனித்தேர்வர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இப்பணிகளுக்கு அனைத்து ஆசிரியர்களையும் பயன்படுத்தாமல், சுழற்சி முறையில் வரவழைப்பது அவசியம். உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு இப்பணிகளை செயல்படுத்த வேண்டும்' என அவர், குறிப்பிட்டுள்ளார்.
Saturday, July 11, 2020
பிளஸ் 2 ஹால் டிக்கெட் 13ம் தேதி முதல் வினியோகம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment