உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 2
புதினா இலை - சிறிதளவு
பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பால் - 1/2 கப்
ஏலக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை :

  • பனை வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.
  • பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.
  • அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, பனை வெல்லம், உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.
  • அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
  • சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!



Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories