Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 14, 2020

புற்றுநோய் அணுக்களை அழிக்கும் மஞ்சள்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


சென்னை ஐஐடியைச் சேர்ந்தஆராய்ச்சியாளர் குழு, மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான 'குர்குமின்' குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

புற்று நோய் சிகிச்சையின்முக்கிய கட்டமாக உடலில் உள்ளஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், நோய்அணுக்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதையசிகிச்சை முறையில் இது முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத'குர்குமின்', ரத்தம் மற்றும் எலும்புமஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் 'லுக்மியா' அணுக்களை திறம்பட அழிப்பதாக சென்னை ஐஐடி உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment